அதிமுகவுக்கு தலைகுனிவு: முதல்வர், அமைச்சர்களுக்கு கூட தெரியாமல் போனதே இந்த விஷயம்!
அதிமுகவுக்கு தலைகுனிவு: முதல்வர், அமைச்சர்களுக்கு கூட தெரியாமல் போனதே இந்த விஷயம்!
அதிமுக பொதுக்குழு இன்று அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் சென்னை வானகரத்தில் கூடியது. இந்த பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் நோபல் பரிசு பெறுவதற்கான விதிமுறைகளில் இறந்த ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட மாட்டாது என்ற விதியே உள்ளது.
1974-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மறைந்த ஒருவரின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை. ஒரு வேளை, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படுவதற்கு முன்பே, அவர் இறந்துவிட்டால் மட்டுமே, அந்த பரிசு அவரது பெயரில் வழங்கப்படும்.
ஆனால், எந்த வகையிலும், உயிரோடு இல்லாத ஒருவரது பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படாது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த விதிகள் எதுவும் தெரியாமல் அதிமுகவினர் பொதுக்குழுவில் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.