தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது அடுத்து கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் போக்குவரத்து துறையால் இயக்கப்பட்டன என்பது தெரிந்ததே
சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன என்பதும் இதனை அடுத்து பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவடைந்ததை அடுத்து நேற்று மாலை முதல் சென்னை திரும்புவதற்கு பொதுமக்கள் தயாரான நிலையில் சிறப்பு பேருந்துகள் அதிகம் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்
குறிப்பாக புதுக்கோட்டை, செங்கம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இல்லாததால் இரவு முழுவதும் பயணிகள் அவதி கிடைத்ததாக கூறப்படுகிறது. வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த மக்கள் திரும்பி செல்வதற்கு பேருந்து வசதி இல்லாமல் தவித்த நிலையில் அரசு உடனடியாக இதுகுறித்து சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது