Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பேப்பர் கப்பில் எந்தவித மெழுகும் பூசப்படவில்லை: உற்பத்தியாளர்கள் விளக்கம்

பேப்பர் கப்பில் எந்தவித மெழுகும் பூசப்படவில்லை: உற்பத்தியாளர்கள் விளக்கம்
, திங்கள், 30 ஜூலை 2018 (18:00 IST)
தமிழக அரசின் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் பேப்பர் கப்பையும் சேர்த்திருப்பதினால் இந்த பேப்பர் கப் தொழிலை சார்ந்த தொழில்கள் முற்றிலும் முடங்கும், ஆகவே, பேப்பர் கப்பில் எந்த வித மெழுகு பொருட்களும் இல்லை, ஆகவே, பேப்பர் கப் உணவு தரம் சார்ந்த பொருள் என்று கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆலோசனை கூட்டத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டது.



தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி  பேப்பர் கப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கரூரில் மாநிலம் தழுவிய நிர்வாகிகள் மற்றும் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.


கரூர் அருகே உள்ள பசுபதிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சார்ந்த ஏராளமான பேப்பர் கப் உற்பத்தியாளர்கள் வருகை புரிந்தனர். மேலும், தமிழக அரசு தற்போது கொண்டு வர உள்ள பிளாஸ்டிக் தடை செய்யபட்ட பொருட்களில் பேப்பர் கப்பினையும் கொண்டு வந்துள்ளது. ஆகவே, பேப்பர் கப் ஆனது மொழுகு கலந்த பொருட்கள் எதுவும் உபயோகப்படுத்தவில்லை. ஆகவே,. வரும் புத்தாண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் அந்த பேப்பர் கப் தொழில் ஆனது., உணவு தரச்சான்று பெற்றதும், மேலும், தமிழ்நாடு காகித ஆலையான, டி.என்.பி.எல் நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் பேப்பர்களை கொண்டு தான் பேப்பர் கப் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் நிர்வாகிகள் கூறினர்.

மேலும், நாங்கள் தயாரிக்கும் பேப்பர் கப்பில் எந்தவித மெழுகும் பூசப்படவில்லை எனவும், ஆகவே, அந்த தடையிலிருந்து பேப்பர் கப்பினை விலக்கு விதிக்க கோரி தமிழக அரசிற்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் பேப்பர் கப்பின் கேடிங் அளவு 94 சதவிகிதமும், எல்.இ.பி அளவு 6 சதவிகிதமும் தான் என்ற விழிப்புணர்வு இந்த கூட்டத்தின் மூலமாக தெரியவேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆகவே, இந்த பேப்பர் கப்பில் தாரளமாக டீ, காபி வகைகளை பொதுமக்கள் அருந்தலாம் என்றும் தமிழ்நாடு & பாண்டிச்சேரி பேப்பர் கப் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் பால சண்முகம் தெரிவித்துள்ளார்.  

சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி காலத்திற்கு பிறகு என்செய்வேன்? அன்றே சொன்ன ஜெயலலிதா!