கன்னியாகுமரிக்கு தெற்கே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.
நேற்று தேன் மேற்கு வங்கக் கடலில், உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது என நேற்றே வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அது புயலாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஓகி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் குமரி கடலில் இருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, பலத்த காற்று வீசுவதால், குமரியில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகின்றன. எனவே, கன்னியாகுமாரி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என குமரி மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த ஒகி பூயல் வட மேற்கு திசையில் நகர்ந்து, லட்சத்தீவுகளை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் எனவும், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிகி மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், புதுகோட்டை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.