ஆயுத பூஜை விடுமுறை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வரவிருப்பதை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊர் சொல்லும் கூட்டம் இன்று முதலே கோயம்பேடு மற்றும் ரயில் நிலையங்களில் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்துகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்பதும் கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
சென்னையிலிருந்து கோவை, மதுரை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு சுமார் 3,000 ரூபாய் வரை ஆம்னி பேருந்துகள் கட்டணம் வசூலித்து வருவதாக பயணிகள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.