தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தென்னிந்தியா முழுவதும் நல்ல மழை பெய்துள்ளதால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அந்த வகையில் சமீபத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முக்கொம்பு அணையின் 6 முதல் 14ஆவது மதகுகளில் உடைப்பு ஏற்பட்டதால் அணையின் நீர் அதிகளவு வெளியேறியது. இதனையடுத்து போர்க்கால அடிப்படையில் மதகுகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் முக்கொம்பு அணையின் 5ஆவது மதகின் தூணில் தற்போது விரிசல் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக 5ஆவது மதகில் உள்ள தூணின் பாரத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முக்கொம்பு அணை சரியாக பராமரிக்கப்படாததால் தான் மதகுகள் மற்றும் தூண்கள் பழுதடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.