தமிழகத்தில் வெங்காய இறக்குமதி குறைந்துள்ளதை அடுத்து அதன் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து வெங்காய வரத்துக் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 56 ஆயிரம் டன் மட்டுமே உற் பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் தேவை அதைவிட அதிகமாக இருக்க மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்மாநிலங்களில் இருந்து வரத்துக் குறைந்துள்ளதால் தற்போது வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரிய வெங்காய விலை கடந்த ஒரு மாதமாக கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ.50 ஆக உயர்ந்திருந்தது. சில்லறை விலைக் கடைகளில் ரூ 60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.