கடந்த சில நாட்களாக வெங்காய விலை அதிகரித்து கொண்டே வருவதால் நடுத்தர மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கிருந்து வரவேண்டிய வெங்காயம் சுத்தமாக நின்று விட்டதால் தான் இந்த விலையேற்றம் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் வெங்காய விலையை சீராக்க வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பசுமைப் பண்ணை கடைகளில் ரூபாய் 45க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வெங்காய விலை உயர்வு குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். வெங்காய விலை உயர்வு என்பது தற்காலிகமானதுதான் என்றும் வெங்காய அறுவடை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக தான் தற்போது விலை உயர்ந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதேபோல் வெங்காயம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தால் ரேஷனில் வெங்காயம் விற்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்