சீனாவில் இருந்து உலகமெங்கும் பரவியுள்ள கோவிட் 19 எனும் கொரோனா தொற்று வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பாதிப்பால் இதுவரை 6 லட்சத்திற்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஊரடங்கு ஜூன் முப்பதாம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களை ஆல் பாஸ் செய்து மாநில அரசுகள் உத்தரவிட்டது, இந்நிலையில், ஜூன் மாதம் துவங்க வேண்டிய கல்வி நிலையங்கள், பள்ளி கூடங்கள், நிலையங்கள் இன்னும் திறக்கப்படுவதற்கில்லை, ஆனால் பள்ளிகளில் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கர்நாடக மாநில அரசு அம்மாநில அரசு ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வழி பாடம் நடத்த தடைவிதித்தது. ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் ஆன்லைன் வழி எல்.கே.ஜி முதல் பன்பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்.கே.ஜி முதல் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வழி பாடம் நடத்தக்கூடாது குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்படும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆண்டிராய்ட் மொபைல், போன், ஐபேட்,. லேப்டாப், கூகுள் ஹேங் அவுட்,கூகுள் மீட், வீடியோ மீட்டிங் ஆப்கள், ஜூம், கேட்ஜெட் போன்றவற்றின் மூலம் ஆன்லைன் வகுப்புகளால் இடையிடையே, ஆபாச வலைதளங்கள் வந்து அவர்களின் கவனத்தைச் சிதறடிப்பதாகவும், குழந்தைகளின் கண்களைப் பாதிக்கப்படுவதாகவும், கண்சிமிட்டாமல் ஆன்லைன் வெளிச்சத்தைப் பார்ப்பதால் விழிப்படலம் பாதிப்படைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
இந்தக் கொரோனா காலத்தில் பள்ளிகள் எப்போது துவங்கும் என உறுதியான தகவல் வெளியாகாத நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதனால் மாணவர்கள் கேட்ஜெட்டை தொடர்ந்து பார்க்காமல் பதினைந்து நிமிடத்திற்கொருமுறை செல்போன், கம்பியூட்டர், கேட்ஜெட் டிஸ்பிளேவை விட்டு ஜன்னலையும் அதன் வழியே தூரத்து காட்சிகளையும் பார்க்க வேண்டும். அப்போதுதான் விழியில் ஈரப்பதம் வற்றாமல், அரிப்பு ஏற்படாமல், பார்வைக்கு பாதிப்படையாமல் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளின் கண்களுக்கு ஆரோக்கயமளிக்கும் கேரட், மீன், திராட்சை,பப்பாளியை, கீரை போன்றவைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.