தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்து இயக்கப்படுவது பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமம் என தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இன்று மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்த ஆலோசனை இன்று சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சம்பளம் போதாது என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள் எனக் கூறுவது தொழிலாளர்களை அவமதிக்கும் செயல். தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களில் நீதிமன்றம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது.
தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்து இயக்கப்படுவது பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமம். எவ்வித நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயராக உள்ளோம். நாங்கள் அடிபணியமாட்டோம். அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்மானத்திற்கு வரும் வரை போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.