புதுவையில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பு என தகவல் வெளிவந்துள்ளது
சமீபத்தில் புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி திடீரென கவிழ்ந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரும் திமுக எம்எல்ஏ ஒருவரும் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்தே நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 14 உறுப்பினர்களை கொண்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என அறிவித்துள்ளன
இதனை அடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த நிலையில் எதிர்க்கட்சிகளும் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்பதால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது