தமிழக அரசு சார்பில் புதிய உணவகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றிற்கும் அம்மா உணவகம் என பெயரிட வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 600க்கும் அதிகமான அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்ரபாணி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்த அறிவுறுத்தலை முன்வைத்துள்ள எதிர்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ், தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் நோக்கில் முதன்முதலாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. எனவே, புதிதாக அரசு தொடங்கும் உணவகங்களும் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே தொடர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.