Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அதிமுக பொதுக்குழுவுக்கு முன்னா பின்னா ஓபிஎஸ் - டிடிவி சந்திப்பு?

அதிமுக பொதுக்குழுவுக்கு முன்னா பின்னா ஓபிஎஸ் - டிடிவி சந்திப்பு?
, சனி, 19 நவம்பர் 2022 (08:48 IST)
அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் விரைவில் நடைபெறும் என அக்கட்சியின் பதவி பறிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ள அதிமுக கட்சியின் இரண்டு பொதுக்குழுக் கூட்டங்களில், ஓபிஎஸ்ஸால் எதிர்க்கப்பட்ட ஈபிஎஸ் தனித்தலைமையுடன் முன்னேற முடிவு செய்ததையடுத்து கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

ஜூலை 11 அன்று, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆகஸ்ட் 17 அன்று கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் நியமனம் செய்யப்பட்டதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இருப்பினும், செப்டம்பர் 2 ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றம் இபிஎஸ் நியமனம் குறித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து ஜூலை 11 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையை மீட்டெடுத்தது. பேச்சுவார்த்தை மற்றும் இரு அணிகளையும் இணைக்க ஓபிஎஸ் முன்வந்த போதிலும், ஈபிஎஸ் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் பின்வருமாறு பேசினார், அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் விரைவில் நடைபெறும். செயல்பாட்டாளர்களை நியமித்தல், புதிய நிர்வாகிகள் அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதோடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்திப்பேன் என்றும் தெரிவித்தார். ஆனால் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ் டிடிவி தினகரன் மற்றும் விகே சசிகலாவை கட்சியில் மீண்டும் சேர்க்க முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
 
Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றைய உலக கொரோனா நிலவரம் என்ன??