சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விருப்பதாக கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்த நிலையில் இன்று அந்த அறிவிப்பை மீண்டும் உறுதி செய்துள்ளார்
இம்மாதம் 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் ஜனவரியில் கட்சி தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுன மூர்த்தி ஆகியோர்களை நியமித்து அரசியல் கட்சிக்கான பணிகளையும் அவர் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கூறியதாவது:
ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். அரசியலில் எதுவும் நடக்கலாம் வருங்காலத்தில் சூழ்நிலையை பொருத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது என்று துணை முதலமைச்சர் கூறியுள்ளார். ரஜினிகாந்த் அரசியல் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது