தமிழகத்தில் மீண்டும் அசாதாரண அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திகார் சிறையில் இருந்து திரும்பி வந்த தினகரன், புது அணி ஒன்றை உருவாக்கியுள்ளார். அவரது அணிக்கு இதுவரை 27 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும் மேலும் சிலர் ஆதரவளிக்க தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் ஓபிஎஸ் அணியில் உள்ள 12 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் டுவிட்டரில் ஒருவர் '"ஆட்சிக்கு பங்கம் வந்தால், பாண்டியராஜன் உள்ளிட்ட ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூட இவர்கள் பக்கம் ( ஈ.பி.எஸ்) வாக்களிப்பார்கள்" என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவை ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ரீடுவீட் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, '"பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலை வந்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார்.