தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்படுகிறது என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும். அதோடு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைவதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கேரளாவில் 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.