ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ இன்று அதிரடியாக கைது செய்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கார்த்திக் சிதம்பரத்தை விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டது.
ஆனால் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவருக்கு உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் இன்று சிபிஐ, கார்த்தி சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்துள்ளது.