பாகிஸ்தான் நாட்டில் சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், அந்த நாட்டு அரசுக்கு உதவும் வகையில் பாகிஸ்தானுக்கு அவசரகால கடனாக ரூ100 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து ஆசிய வளர்ச்சி வங்கியின் மத்திய மற்றும் மேற்கு ஆசியாவிற்கான நிர்வாக இயக்குநர் வெர்னர் லெய்பாக் கூறியுள்ளதாவது :
பாகிஸ்தான் நாட்டில் சில மாதங்களாக மிகக் குறைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் அதிகமான கடன் சுமை உள்ளதால், பாகிஸ்தான் அரசு கடும் பொருளாதார சவால்களைச் சந்தித்துள்ளது.
அதனால், ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பாக வழங்கப்படும் கடனானது பாகிஸ்தானில் நிலவுகிற பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த உதவும். நிறுவனங்களின் வளர்ச்சியை சீராக்கவும் உதவுமென கூறியுள்ளது..
இந்த பண உதவி பாகிஸ்தான் நாட்டுக்கு கிடைத்தால், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என தகவல் வெளியாகிறது.