முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோவிலில் கும்பாபிஷேகம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் உலகப் புகழ் பெற்றது என்பதும் இங்கு கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அடுத்த கும்பாபிஷேகம் 12 ஆண்டுகள் கழித்து அதாவது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டது
இதனை அடுத்து தற்போது கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது ஜனவரி 27ஆம் தேதி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்
கும்பாபிஷேகத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு என்றும் அவர் கூறி உள்ளார்.