விரைவாக நிலக்கரியை எடுத்துச் செல்லும் வகையில் சில எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக நிலக்கரி சப்ளை செய்து ரயில்வே துறை சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மின்சார உற்பத்தி பெரும்பாலும் அனல் மின் நிலையங்களை சார்ந்து உள்ள நிலையில், அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை ரயில்வே துறை சரக்கு ரயில்கள் மூலமாக கொண்டு சேர்த்து வருகிறது.
மின் உற்பத்தி நிலையங்கள் முழுவதற்கு நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக நிலக்கரி கொண்டு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இயக்கப்பட்டன. இதனால் தேவையான அளவு நிலக்கரி விநியோகம் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் மார்ச் வரை வழக்கத்தை விட கூடுதலாக 32% கூடுதல் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிலக்கரி போக்குவரத்தில் மொத்தமாக 111 டன் அதிகரித்து 653 மில்லியன் டன் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னதாக விரைவாக நிலக்கரியை எடுத்துச் செல்லும் வகையில் சில எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. அதன்படி, கடந்த நாட்களில் 670 பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்வே சார்பில் நாள்தோறும் 400க்கும் அதிகமான பெட்டிகள் மூலம் நிலக்கரி விநியோகிக்கப்பட்டு வருகிறது.