அரசு பேருந்தில் ரிவேஸ் கியர் விலாததால் சாலையில் நின்ற அரசு பேருந்து பயணிகள் அவதி....
, வெள்ளி, 18 அக்டோபர் 2024 (10:00 IST)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 30க்கு மேற்பட்ட பயணிகளை 52 என்ற எண் கொண்ட அரசு பேருந்து சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே வந்த அரசு பேருந்து ரவுண்டானா பகுதியில் பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றுள்ளார்.
பேருந்து திருப்ப முடியாததால்,மீண்டும் பேருந்தை பின்னோக்கி இயக்க முயன்றுள்ளார். பேருந்தில் ரிவேஸ் கியர் விலாததால் ஓட்டுநர் நீண்ட நேரமாக போராடிக் கொண்டிருந்தார். ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பேருந்தின் உள்ளே சென்று ரிவர்ஸ் கியர் போட முயன்றபோது விலாததால் பொதுமக்கள் உதவியுடன் பேருந்து பின்னோக்கி தள்ள முயற்சி செய்தும் பலன் அளிக்காத சூழ்நிலையில் பேருந்து ஓட்டுனர் பேருந்து அணைத்துவிட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்த பிறகு பேருந்தில் ரிவெஸ் கியர் விழுந்ததை அடுத்து பேருந்தை பின்னோக்கி இயக்கி பேருந்து எடுத்து சென்றனர்.
15 நிமிடத்திற்கும் மேலாக பேருந்து சாலையில் நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகள் பாதுகாப்பு இல்லாத அரசு பேருந்து இறங்கி மாற்று பேருந்தில் பயணம் மேற்கொண்டனர்.
தற்போது தீபாவளி பண்டிகை வருவதால் பேருந்துகளில் அதிக பயணிகள் கூட்டம் இருக்கும் சூழ்நிலையில் அரசு பேருந்துகள் முறையாக பராமரிப்பு செய்து இயக்க வேண்டும் என பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது..
அடுத்த கட்டுரையில்