கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளது. மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பலர் உண்ண உணவின்றி, உடையின்றி, இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகை மாவட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்படவில்லை என மக்கள் மறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது நிவாரணப்பொருட்களுடன் அங்கு சென்ற கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர் வந்த காரை மக்கள் அடித்து நொறுக்கினர்.
இதனால் அமைச்சர் வேறு காரில் ஏறி உடனடியாக அந்த இடத்தைவிட்டு மறைந்தார். இச்சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.