கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒரே விலையில் இருப்பதை அடுத்து எப்போது குறையும் என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகின்றனர். ஆனால் கச்சா எண்ணெய் விலை உயரும்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை குறையும்போது விலையை குறைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ஒரே விலையில் பெட்ரோல் டீசல் விலை விற்பனையாகி வரும் நிலையில் சென்னையில் இன்றும் அதே விலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது