நாட்டில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக பாஜக, காங்கிரஸ், திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை குற்றம்சாட்டி, கடுமையாக விமர்சனம் செய்து, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் வேலைவாய்ப்பின்மை உச்சத்தில் இருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 முதல்வர்களை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
கேட்டால் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்கிறார்கள்.
ஆனால், மற்ற கட்சிகளில் இருந்து எல்லா ஊழல்வாதிகளையும் தங்கள் கட்சியில் இணைந்துள்ளார்கள்.
இது தான் இவர்களின் ஊழல் ஒழிப்பு லட்சணம். இவர்களை மக்களாகிய உங்களின் வாக்குகளால் மட்டுமே தடுக்க முடியும்.
விவசாயிகளின் பிரச்சனையை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.