Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஜாக்டோ ஜியோப் போராட்டம் – திண்டாட்டத்தில் போலிஸ் !

ஜாக்டோ ஜியோப் போராட்டம் – திண்டாட்டத்தில் போலிஸ் !
, வெள்ளி, 25 ஜனவரி 2019 (07:54 IST)
கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களைக் கட்டுபடுத்த காவல்துறையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நீக்குதல், 7ஆவது ஊதியக் குழுவின் ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ஆகியக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதால் ஆசிரியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல் என்ற 11ஆம் வகுப்பு மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 25 (இன்று) க்குள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
webdunia
 
ஆனாலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டைக் கைவிடுவதாக இல்லை. தொடர்ந்து மூன்று நாட்களாகப் போராடி வரும் அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்து மாலையில் விடுதலை செய்கின்றனர். கைதாவதில் பெரும்பாலானவர்கள் பெண் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என்பதால் காவல்துறைக்கு தர்மசங்கடமான சூழல் உருவாகியுள்ளது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர்களிலும் ஆயிரக்கணக்கானப் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாவதால் அவர்களைக் கைது செய்து மதிய உணவுகளை வாங்கித் தவ்ருவதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் செய்வதறியாது முழித்து வருகின்றனர்.

ஆனால் இதனையறிந்த அரசு ஊழியர்கள் தங்கள் சாப்பாடுகளைத் தாங்களே வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கைது செய்யு மீண்டும் மாலையில் அவர்களை விடுவிப்பது காவல்துறையினருக்கு சிரமத்தைக் கொடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத்தாலிக்கு திரும்பி செல்லுங்கள்: ராகுல்காந்திக்கு எதிராக விவசாயிகள் கோஷம்