கோவையில் எம்.எல்.எம். நிறுவனத்திற்கு ஆதரவாக கூடிய பொதுமக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை சேர்ந்த சத்யானந்த் என்பவர் செயலி ஒன்றை ஆரம்பித்து அந்த செயலியில் உள்ள விளம்பரத்தை பார்த்தால் வருமானம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்திருந்தார்.
360 முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என்றும் அவரவர் முதலீட்டிற்கு ஏற்ப வருமானம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த செயலி மூலம் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் சாத்தியானந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் இந்த செயலி மூலம் தங்களுக்கு வருமானம் கிடைப்பதாகவும் பொய்யான புகார் அளிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் திடீரென கூடி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் எந்த இடையூறு வந்தாலும் தொடர்ந்து நாங்கள் இந்த நிறுவனத்தை நடத்துவோம் என்று சாத்தியானந்த் கூறி வந்தார். இந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திடீரென போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது