தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் புதிதாக 24 இடங்களில் காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களை அமைக்க முடிவெடுத்துள்ளது.
இந்தியாவின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் குறித்த கேள்விக்கு சமீபத்தில் பதில் கூறிய மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் ,நாடு முழுவதும் 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது; தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி தூத்துக்குடி சென்னை மதுரை ஆகிய நகரங்களில் காற்று மாசு அதிக அளவில் உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் புதிதாக 24 இடங்களில் காற்றுத்தர கண்காணிப்பு நிலையங்களை அமைக்க முடிவெடுத்துள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் மொத்தம் 34 இடங்களில் தொடர்காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், மேலும், 24 கண்காணிப்பு நிலையங்கள் அமைக்க முடிவெடுத்துள்ளது.
அதன்படி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 24 இடங்களில் அமைக்க உள்ளதாகவும், அதன் மூலம் நிகழ் நேரத்தில் காற்றின் தரத்தைச் சோதித்தறிய உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.