சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலை அடுத்து அவரை அவ்வப்போது அரசியல் பிரமுகர்கள் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர். அனேகமாக ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு கோல்டன் ஜூபிலி விருது வழங்குவதாக அறிவித்தது. இந்த விருதை கோவாவில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவின் போது ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற உள்ள ரஜினிக்கு பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகினர் அவரை பாராட்டி வருகின்றனர்
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக பிரமுகருமான பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தார். கோல்டன் ஜூபிலி விருது பெற உள்ள ரஜினிக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாகவும் அதற்கு ரஜினிகாந்த் தனது நன்றியை மத்திய அரசுக்கு தெரிவிக்கும்படி கூறியதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது
பாஜகவின் முகமாக ரஜினிகாந்த் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் தற்போது பாஜக பிரமுகர் ஒருவர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது