மதுரை மாவட்டம், வலையப்பட்டி என்ற பகுதியில் வசித்துவருபவர் முனியாண்டி(29). இவருக்கும், கட்டாரெட்டியில் வசிக்கும் பவித்ரா என்ற பெண்ணுக்கும் , இருவீட்டாரால் கலந்து பேசி முடிக்கப்பட்டு இன்று, திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மாட்டுத்தாவணியில் அருகே உள்ள ஒரு அரங்கில், இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், மாப்பிள்ளை, மணப்பெண், இரு வீட்டார் மற்றும் உறவினர்கள் எல்லோரும் கூடியிருந்தனர்.
அப்போது, திடீரென அரங்கினுள், கையில் ஒரு குழந்தையுடன் நுழைந்த ஒரு இளம் பெண், திருமணத்தை நிறுத்துமாறு கூறினார். மணப்பெண் முதற்கொண்டு எல்லோரும் சற்று அதிர்ச்சியுடன், அப்பெண்ணைப் பார்த்து ஏன் என அனைவரும் அவரைக் கேட்டுள்ளனர்.
அதற்கு அப்பெண் கூறியதாவது:
என் பெயர் ஈஸ்வரி (37).நாம் ஏற்கனவே திருமணமாகி, இருக்கும் நிலையில், கணவருக்கும் எனக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து, விவாகரத்து பெற்றுவிட்டேன். அதனால் தனியாக வசித்து வந்தேன். அப்போது, மாப்பிள்ளையாக உள்ள முனியாண்டிக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. நான் இப்போது, கர்ப்பமாக இருக்கிறேன். இன்று, முனியாண்டிக்கு திருமணம் என்று தெரிந்து திருமணத்தை நிறுத்த இங்கு வந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, முனியாண்டியும், ஈஸ்வரி உடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர். இதனால், மணப்பெண் வீட்டார், திருமணத்திற்கு செலவு செய்த தொகையைக் தருமாறு கேட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனே சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போலீஸார், இருதரப்பினருடன் பேசி சமாதானம் செய்துவைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.