Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

என்னத்த ஆண்டு அனுபவிச்சிட்டோம்: தேர்தல் நெருங்க நெருங்க குமுறலில் பிரேமலதா!

என்னத்த ஆண்டு அனுபவிச்சிட்டோம்: தேர்தல் நெருங்க நெருங்க குமுறலில் பிரேமலதா!
, சனி, 8 ஆகஸ்ட் 2020 (13:57 IST)
தேர்தல் நெருங்கி வருவதால் அடுத்த கட்சியின் நிலை என்னவென பிரேமலதா தொண்டர்களிடம் புலம்பியதாக தெரிகிறது. 
 
தேமுதிக தமிழக அரசியலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய காலம் ஒன்று இருந்தது. 60 ஆண்டுகாலம் பாரம்பரியம் கொண்ட திமுகவை எதிர்க்கட்சியாக ஆக கூட வர முடியாமல் 2011 தேர்தலில் 29 தொகுதிகளில் எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்தது. 
 
ஆனால் ஒரு கட்டத்தில் அக்கட்சி அப்படியே தேக்கம் அடைந்தது. அதன் பிறகு பெரிதாக தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதன் பின்னர் மக்கள் நலக் கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி என தேர்தல்களை சந்தித்து வருகிறது.
 
இந்நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபிரன்ஸில் பிரேமலதா, ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி வைத்துவைத்து,  கூட்டணி கட்சிகளுக்கு தான் பலன் கிடைக்கிறது. தேமுதிக கட்சிக்கோ அல்லது தேமுதிக தொண்டர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. 
 
இனி வரக்கூடிய தேர்தல்களில் தேமுதிக வெற்றி பெறவேண்டும். நம் நிர்வாகிகள் வெற்றி பெறவேண்டும் என்ற விதத்தில் வியூகம் அமையுங்கள் என பேசியுள்ளார். தற்போது கூட்டணியில் உள்ள அதிமுக - பாஜகவிற்கு இடையே  மோதல் சூழல் உள்ளதால், இந்த கூட்டணி அடுத்த தேர்தலுக்கு நிலைக்காது என கூறப்படுகிறது. 
 
எனவே மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள பாஜகவிற்கே தமிழகத்தில் இந்த நிலைமை என்றால் வெறும் மாநில கட்சியான நமது நிலை என்னெவென்ற பயம் பிரேமலதாவிற்கு வந்துவிட்டதாக பேசிக்கொள்கின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாங்காங் முக்கிய தலைகளுக்கு தடை விதித்தது அமெரிக்கா!