அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு பார்க்கலாம் என கூறிய நிர்வாகிகளிடம் கோபத்தோடு கடுமையாக பேசினாராம் பிரேமலதா.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பெரும் சிக்கலுக்கு பின்னர் தேமுதிக கூட்டணி அமைத்தது. தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
நாடளுமன்ற தேர்தல் இடைத்தேர்தல் என இரண்டிலும் தோல்வியை தழுவியதால் தேமுதிகவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவிடம் ராஜ்யசபா சீட் கேட்டுபார்க்கலாம் என நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இதை கேட்டு கடுப்பான பிரேமலதா, கூட்டணி அமைப்பின் போது பாமகவுக்கு 1 ராஜ்யசபா சீட் கண்டிப்பாக தருகிறோம் என ஒப்பந்தம் போடப்பட்டது. அப்படி இருக்கும் அவர்களுக்கே சீட் கொடுக்கப்படுமா என தெரியவில்லை.
ஆனால், கொடுத்த ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் நாம் எப்படி போய் எங்களுக்கு 1 சீட் தாங்கன்னு கேட்க முடியும்? யோசிக்க மாட்டீங்களா என நிர்வாகிகளிடம் சத்தம் போட்டதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.