தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் முதன் முதலாக தேர்தலில் நின்று வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில் இப்போது பிரேமலதா விஜயகாந்த் நிற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதிமுக தரப்பில் பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தனது சமீபத்திய பேட்டியில், தேமுதிக தனித்து போட்டியிட்டாலும் 234 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம் கூட்டணி தர்மத்தை மதிக்கும் கட்சி இது. எந்த கட்சியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் 2006 தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நின்று வெற்றிபெற்ற விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் நிற்க ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது. அதே போல விருகம்பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் நிற்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.