சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சில ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கல்வி அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போராட்டம் தொடர்கிறது என்று ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறாது.
இந்த நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.