Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

குவாரி உரிமம் முடிந்த கல்குவாரிகளை உடனே மூட வேண்டும்- சமூக நல ஆர்வலர்கள்

karur
, திங்கள், 2 மே 2022 (23:50 IST)
கரூரில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் குவாரி உரிமம் முடிந்த கல்குவாரிகளை உடனே மூட வேண்டுமென்றும்,  கரூர் அருகே கடவூர் பகுதியில் அரிய உயிரினமான தேவாங்குகள் சரணாலயம் அமைக்கும் முயற்சிக்கு தமிழக அரசிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த சமூக நல ஆர்வலர்கள்.
 
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் ஏராளமானோர் மனுக்கள் கொடுத்தனர். இந்நிலையில், தமிழக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில், ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் காவிரி பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சண்முகம், விஜயன், லா பவுண்டேஷன் வாசுதேவன் உள்ளிட்டோர் சார்பில் 4 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கொடுக்கப்பட்டது கரூரில் போடப்படாத சாலைகளுக்கு பில் போட்டதற்கு அன்றும், இன்றும் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும், கரூர் மாவட்ட அளவில், உரிமம் முடிந்த நிலையிலும்  இயங்கி கொண்டிருக்கும் கல்குவாரிகள் மீது அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இன்றுவரை சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிகளுக்கு அபராதத்தொகையினை விதித்து அரசின் கஜானாவினை நிரப்ப வேண்டும், கடந்த சில தினங்களுக்கு என்.டி.சி கல்குவாரியில் லாரி மீது ஒரு பாறை விழுந்து டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலை இனி தொடரக்கூடாது என்றும், இதனை கண்காணிக்க குழுவினை தீவிரப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல், சுண்ணாம்பு கல்குவாரி அமைக்க 403 பக்கம் கருத்து கேட்பு கூட்டத்தில் கொடுக்கப்பட்ட ஆவணம் ஆங்கிலத்தில் உள்ளதால் அதனை தமிழில் கொடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே முகிலன் தலைமையில் முழக்கங்கள் எழுப்ப பட்ட நிலையில், கரூர் டி.எஸ்.பி தேவராஜ் அங்கு குறுக்கிட்டு மனுக்களாக கொடுங்கள் என்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மனுக்களாக கொடுக்க ஏற்பாடு செய்தார். இந்த திடீர் முழக்கத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலைப்பாம்புகளுடன் டான்ஸ் ஆடிய வாலிபர்…