தமிழகத்தில் பகலில் வெப்பநிலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் அதேபோல் இரவில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது என்பதும் இதனால் சாலையில் மழை நீர் தேங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் பகலில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இரவில் இடி மின்னலும் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஜூலை 27வது தேதி வரை மிதமான மழை முதல் கனமழை வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பகலில் வெப்பநிலை ஓரளவுக்கு அதிகமாக இருந்தாலும் இரவில் மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையை அனுபவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.