கடந்த சில நாட்களாகவே நடிகர் ரஜினி தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வந்த நிலையில் இன்று தனது அரசியல் முடிவை அறிவித்ததுடன், வரும் ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில், ரஜினியின் ரசிகர்களுக்கு அவரது முடிவு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்போ இல்லீனா இனி எப்பவும் இல்லை என்று ரஜினியின் ரசிகர்களின் நீண்டகாலக் குரல் இன்று பலித்துள்ளது.
இந்நிலையில் அவருக்கு சக நடிகர்கள் நடிகைகள் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ரஜினியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தனது அரசியல் வருகை குறித்து கடந்த 30 ஆண்டுகளாகப் பதிலளித்து வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்த தங்கபாலு, ஈவிகேஎஸ். இளங்கோவன், திருநாவுக்கரசு உள்ளிட்ட தலைவர்களுக்கு வயதாகிவிட்டது. எனக்கும் வயதாகிவிட்டது . அதேபோல் ரஜினிக்கும் வயதாகிவிட்டது அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தமிழகத்துணைமுதல்வர் ஒபிஎஸ், ரஜினியால் வாக்குகள் குறையுமா என்று கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எத்தனைப்பேர் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றும் இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்னொரு பிரபலம் தெலுங்கான மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் ஆட்சியைப் பிடித்தார் எனத் தெரிவித்துள்ளார்.