நடிகர் ரஜினிகாந்த தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் கலவரத்தின் போது காயமைடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பிற்கு பின்னர் முதன் முறையாக மக்கள் பிரச்சனைக்காக களமிறங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். மக்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், சமூக விரோதிகளே இந்த கலவரத்திற்கு காரணம். இந்த கலவரத்திற்கு சில விஷ கிருமிகளும், சமூக விரோதிகளும்தான் காரணம். சமூக விரோதிகளின் ஊடுருவலை கவனிக்க தவறியது உள்வுத்துறையின் தவறு.
இதற்காக காவல்துறையினரை மட்டுமே குறை கூறுவதும் தவறு. 7 கோடி மக்களை பாதூகாப்பது அவர்கள்தான். தூத்துக்குடி சம்பவம் காவலர்களுக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது. காவலர்களை தாகியவர்களையும், போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவர்களையும் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.
பிரச்சனைகளுக்கு தீர்வு காண நீதிமன்றங்கள் உள்ளது. போராட்டங்கள் எச்சரிக்கையோடு நடைபெற வேண்டும். போராட்ட பூமியாகவே இருந்தால் தொழில்துறை, வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், ஸ்டெர்லைட் இனி அனுமதிக்கப்பட கூடாது என பேசினார்.