கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்கள் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதலாவது இணை இயக்குனராக ஆர் சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்தார் என்பதும் இதுகுறித்த அவருடைய டுவிட்டில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களை அடுத்து ரஜினிக்கும் டேக் செய்திருந்தார் என்பதும் தெரிந்ததே
பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வருக்கு அடுத்து மத்திய அமைச்சர் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குனர் நியமனத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது நன்றியை தெரிவித்தார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் ’மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு புதிய இயக்குநரை நியமனம் செய்ததற்கு நன்றி என்றும், தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்தவும், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு பாடுபட்டு அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்களுக்கு பாராட்டுக்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஜினிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தனது டுவிட்டரில் அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் தமிழில் டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம் என்றும், தமிழ் மொழியினை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் பணிபுரிந்து வருகிறது என்பதை உங்களுக்கு உறுதிபடுத்துகிறேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.