17வது மக்களவை தேர்தல் நடந்து முடிந்து பாஜக வெற்றி வாய்ப்பின் அருகில் இருக்கிறது. இந்நிலையில் பாஜக காலையில் பெரும்பான்மை அடைய தொடங்கும்போதே ரஜினி தனது வீட்டில் தன் கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த தொடங்கி விட்டார். இவர்தான் தேர்தலில் நிற்கவே இல்லையே! இவர் என்ன ஆலோசனை கூட்டம் நடத்த போகிறார் என்பதே பலருடைய சந்தேகமாக இருந்தது.
இந்நிலையில் அவர் தனது கட்சியின் அடுத்த கட்ட நகர்வை நோக்கி ஆலோசனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினி அவரது கட்சியின் உறுப்பினர் மன்ற கூட்டத்தில் “ உண்மையான, நேர்மையான சாதி, மத பேதமற்ற ஆன்மிக ஆட்சியை கொண்டு வருவதே என் நோக்கம் என்று பேசியிருக்கிறார் “ என்று பேசியிருக்கிறார். அவரது கருத்து மத்தியில் ஆளும் பாஜகவின் கருத்துக்கு நிகராகவே இருக்கிறது.
எனவே மத்தியில் எப்படி ஒரு மதரீதியான ஆட்சி நிலைபெற்றிருக்கிறதோ அதுபோல தமிழகத்திலும் ஒரு ஆட்சியை உருவாக்க ரஜினி முயற்சிக்கக்கூடும் என்றும் அதற்காக தேவையான உதவிகளை மத்தியிலிருந்து பெறுவதற்காகவே இந்த திடீர் ஆலோசனை கூட்டத்தை நடத்தியிருக்கலாம் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. எது எப்படியிருந்தாலும் தனது சக நண்பரான கமல்ஹாசன் கூட கட்சி தொடங்கி ஒரு நிலைக்கு போய்விட்ட நிலையில் தானும் ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் ரஜினி.