தமிழக கோயில்களில் ராமர் கோயில் திறப்பை நேரலை செய்ய செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலையை தடுக்க திமுக அரசு முயற்சிப்பதாக பாஜகவினர் குற்றச்சாட்டு வருகின்றனர். தனியார் மண்டபத்தில் அயோத்தி சிலை பிரதிஷ்டை நேரலை செய்ய அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ், ராமர் கோயில் திறப்பை நேரலை செய்யவோ, பூஜை செய்யவோ, காவல்துறையின் அனுமதி தேவை இல்லை என்று தெரிவித்தார்.
தனியார் மண்டபங்கள், கோயில்களில் நேரலை செய்ய யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என்றும் அறநிலையத்துறை கோயில்களில் பூஜை மற்றும் நேரலை செய்ய செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும் என்று நீதிபதி வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்