சமீபத்தில் அமைச்சர் உள்பட ஒருசிலரது வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தாலும்,ம் அந்த சுப்ரீம் ஸ்டார் வீட்டில் மட்டும் ரெய்டு நடந்ததற்கு வேறு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் அந்த தாமரை கட்சி, ரஜினி உள்பட பெரிய நடிகர்களை கட்சியில் இழுத்து போட முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் பண நெருக்கடியில் இருந்த சுப்ரீம் ஸ்டாருக்கு ஜாதி ஓட்டு கணிசமாக இருப்பதை கேள்விப்பட்டு அவரை ஒரு தூதர் மூலம் அணுகி கட்சியில் இணைந்துவிடும்படி கேட்டுக்கொண்டது. பத்து கோடி தந்தால் கட்சியை கலைத்துவிட்டு தாமரையுடன் ஐக்கியமாக ஒப்புக்கொண்டாராம் அந்த ஸ்டார்.
இதுகுறித்து மேலிடத்தில் அந்த தூதர் பேசிக்கொண்டிருக்கும்போதே, அந்த ஆளுங்கட்சி பிரமுகரின் தூதுவர் ஒருவர் சுப்ரீம் கேட்ட பத்து கோடியை கையோடு கொண்டு வந்து கொடுத்து ஆதரவு தாருங்கள் என்று கேட்டதாம், தாமரை தரப்பு யோசித்து கொண்டிருக்கும்போதே கையில் கேஷூடன் வந்த தூதருக்கு ஓகே சொல்லிவிட்டாராம் சுப்ரீம். இந்த நம்பிக்கை துரோகத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த தாமரை உடனே வருமான வரித்துறையினர்களை ஏவிவிட்டதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.