வங்க கடலில் தோன்றிய உள்ளவங்க காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் இந்த கனமழை காரணமாக சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு கரையை கடந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் வாபஸ் பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
இதனை அடுத்து இந்த பகுதிகளில் பெரும்பாலும் தற்போது மின் வினியோகம் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன