நெய்வேலியில் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலரை பிரபல ரவுடு கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள லிக்னைட் சுரங்கத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலராக பணிபுரிந்து வருபவர் செல்வேந்திரன். என்.எல்.சியின் இரண்டாவது சுரங்கம் அருகே இரும்பு, தளவாட பொருட்கள் அடிக்கடி திருட்டு போவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருந்துள்ளது.
அதை தொடர்ந்து இரண்டாவது சுரங்கம் அருகே சக காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளார் செல்வேந்திரன். அப்போது அங்கு பெங்களூர் மணி மற்றும் கூட்டாளிகள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை பிடித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ரவுடி பெங்களூர் மணி கத்தியை எடுத்து காவலர் செல்வேந்திரன் வயிற்றில் குத்திவிட்டு கூட்டாளிகளோடு தப்பிவிட்டான். சக காவலர்கள் செல்வேந்திரனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.