தமிழகத்தில் மே 16 ஆம் தேதி( நேற்று ) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.163 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 7 ஆம் தேதி நீண்ட நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கபட்டன. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவை அடுத்து மதுக்கடைகள் மே 9 ஆம் தேதி மூடப்பட்டன. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. அதன்பின் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. மதுக்கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று மதுக்கடைகள் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் திறக்கப்பட்டன.
இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.163 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.