ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் பெண் பொறியாளரை காப்பாற்ற சமூக வலைத்தளங்கள் மூலம் மூன்றே நாளில் ரூ.42 லட்சம் குவிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளர் பிரீத்திக்கு(26) கடந்த 25 நாட்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறிப்பட்டது. இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.
இவருக்கு மருத்துவ செலவு ரூ.35 முதல் ரூ.40 லட்சம் வரை ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மருத்துவ செலவுக்கான தொகையை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிரீத்தியின் நண்பர்கள் சிலர் ஃபேஸ்புக் மூகம் இவரது நிலைமையை பகிர்ந்துள்ளனர். அதன்மூலம் ரூ.5 லட்சம் வரை கிடைத்துள்ளது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான சக்திவேல் பன்னீர் செல்வம் பிரீத்தின் புகைப்படத்தை வலைத்தளத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் பிரீதி குறித்து சமூக வலைத்தளங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவை ஆர்.ஜே.பாலாஜியும் பகிர்ந்தார். பின் உலகம் முழுவதும் இருந்து பலரும் உதவி கரகங்கள் நீட்டினர்.
இதனால் மூன்றே நாளின் ரூ.42 லட்சம் நிதி குவிந்தது. இந்நிலையில் அவர் மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்கள் உதவுபவர்களின் எண்ணிக்கை தற்போது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.