கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும், தொழிலதிபர்களும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நிதியுதவி குவிந்து வருகிறது
இந்த நிலையில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.5 கோடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
வணக்கம் தங்களின் தலைமையில் அமைந்துள்ள அரசு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தாங்கள் எடுத்து வரும் சீரிய முயற்சிகளுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் சார்பாக முதற்கண் எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு எங்கள் சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 கோடி நிதியுதவியாக அனுப்பி உள்ளோம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் நாங்களும் பங்கேற்க தாங்கள் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி’ என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது