ஜனநாயகப்படி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.
தேர்தல் என்பது பணநாயகமாக மாறிவிட்டது என்றும் பணநாயகம் மாறி ஜனநாயகம் முறையில் தேர்தல் நடந்தால் எங்கள் கட்சியின் தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமையும் என்றும் அந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தேர்தல் நடைபெறுவதில்லை என்றும் முற்றிலும் வாக்கு சீட்டு அடிப்படையில் தான் நடைபெறுகிறது என்றும் அதேபோல் இந்தியாவிலும் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.
அதற்காக டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டாம் என்று நான் கூறவில்லை என்றும் ஏன் காரில் போகிறீர்கள் மாட்டு வண்டியில் போங்கள் என்று கூற வேண்டாம் என்றும் சந்தேகம் இருப்பதால்தான் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன் தேர்தல் என்பது அனைவருக்கும் சந்தேகத்துக்கு இடமின்றி நடைபெற வேண்டும் என்றும் அவருக்கு கூறினார்.