மக்கள் நீதி மய்யம் கட்சியோடு கூட்டணி அமைத்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தேர்தலில் போட்டியிடாதது குறித்து பதிலளித்துள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. அதில் 3 தொகுதிகளை திருப்பில் அளித்த சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். அதில் அவரே தேர்தலில் போட்டியிடாதது குழப்பங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்போது கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சரத்குமார் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.