கையை விட்டு போகும் கட்சி: அதிர்ச்சியில் உறைந்த சசிகலா!
கையை விட்டு போகும் கட்சி: அதிர்ச்சியில் உறைந்த சசிகலா!
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டுமானால் சசிகலா உள்ளிட்ட அவரது மொத்த குடும்பமும் கட்சியை விட்டு போக வேண்டும் என்பது ஓபிஎஸ் அணியின் முதன்மை கோரிக்கையாக இருக்கிறது.
ஜெயலலிதா இறந்த பின்னர் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சசிகலா சிறைக்கு செல்லும் போதும் அதிமுக தானது குடும்பத்தின் கட்டுப்பாட்டிலே இருக்க வழி செய்தார். ஆனால் அவரால் நியமிக்கப்பட்ட தினகரனும் கைதாகி டெல்லி போலீஸின் பிடியில் உள்ளார்.
தினகரனையும் அவரது குடும்பத்தையும் ஒதுக்கி வைப்பதாகவும் அறிவித்துவிட்டது அதிமுக அம்மா அணி. இந்த நிலையில் சசிகலா பேனர்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அதிரடியாக அகற்றிவிட்டனர்.
தினகரன் கைது செய்யப்பட்ட செய்தியை சசிகலாவிடம் சொல்ல பெங்களூர் சிறைக்கு சென்ற இளவரசியின் மகன் விவேக், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து தினகரன் படம், சசிகலா படம் எல்லாத்தையும் அகற்றிவிட்டதையும் கட்சி மொத்தமா ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணியின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் கூறியிருக்கிறார்.
இதனை கேட்ட சசிகலா, போட்டோவை தூக்கினா தூக்கிட்டு போகட்டும். இது எல்லாத்துக்கும் தினகரன் தான் காரணம் என சசிகலா கூறியதாகவும் மேலும் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது புரியாமல் குழப்பத்தில்தான் சசிகலா இருப்பதாக தகவல்கள் வருகின்றன.