Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

முதல்வராக தகுதியே இல்லாத சசிகலா பேராசைப்படுவது ஏன்?

முதல்வராக தகுதியே இல்லாத சசிகலா பேராசைப்படுவது ஏன்?

முதல்வராக தகுதியே இல்லாத சசிகலா பேராசைப்படுவது ஏன்?
, திங்கள், 6 பிப்ரவரி 2017 (09:19 IST)
தமிழக முதல்வராக சசிகலா இன்னும் சில தினங்களில் பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சசிகலா முதல்வராவதை யாரும் விரும்பவில்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது.


 
 
இந்நிலையில் ஆரம்பம் முதலே சசிகலாவை எதிர்த்து வரும் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தற்போது சசிகலா மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
 
நேற்று அவசர அவசரமாக கூட்டப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலாவை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து முதல்வராக அறிவித்துள்ளனர். இதனையடுத்து தான் சசிகலா புஷ்பா தனது காட்டத்தை காட்டியுள்ளார்.
 
இது தொடர்பாக சசிகலா புஷ்பா கூறியதாவது, முதல்வர் பதவிக்கு சசிகலா நடராஜன் வருவதை தமிழக மக்களும் இளைஞர்களும் விரும்பவில்லை. சசிகலா நடராஜன் அவசரம் அவசரமாக பதவியேற்க பேராசைப்படுவது ஏன்? குற்றச் செயலுக்காக கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர் சசிகலா. எந்தவிதமான அரசியல் பணிகளிலும் ஈடுபடாதவர், கட்சிக்காக எந்த போராட்டங்களிலும் ஈடுபடாதவர் சசிகலா.
 
சசிகலாவிற்கு பதவி வழங்கப்பட்டதை கண்டு அதிமுக தொண்டர்கள் கொதித்து போயுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் சசிகலா முதல்வராக ஆசைப்படலாமா? தமிழக முதல்வர் பதவிக்கு தகுதியே இல்லாதவர் சசிகலா, அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுநருக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்: தனிப்பட்ட பிரச்சனை இருப்பதால் ராஜினாமா!